முசிறியில் லஞ்ச ஒழிப்பு சோதனை 1.80 லட்சம் பறிமுதல்

கணக்கில் வராத பணம்

Update: 2021-01-12 08:30 GMT

திருச்சி மாவட்டம் முசிறியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் மதுவிலக்கு காவல் நிலையத்தில் ரூ. 1.80 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

முசிறி கைகாட்டி அருகே முசிறி மதுவிலக்கு அமலாக்கபிரிவு அலுவலகம் இயங்கி வருகிறது. இந்நிலையில் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் அதிகமாக லஞ்சம் பெறப்படுவதாக புகார் மனுக்கள் சென்றது. இதையடுத்து திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி. ராஜீ தலைமையிலான போலீசார் மதுவிலக்கு பிரிவு அலுவலகத்திற்குள் புகுந்து அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் முசிறி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்திற்குள் கணக்கில் வராத ரூபாய் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.

கணக்கில் வராத அந்த பணம் யாரால் கொடுக்கப்பட்டது ?யார் வாங்கியது ?காவல் நிலையத்திற்குள் அந்தப் பணம் வருவதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் லஞ்ச ஒழிப்பு போலீசார் மதுவிலக்கு போலீசாரிடம் விசாரணை மேற்கொண்டனர். பணத்தை பறிமுதல் செய்த போலீசார் ஆவணங்களில் கையொப்பம் பெற்ற பின்னர் விசாரணைக்கு திருச்சி அலுவலகம் வருமாறு கூறி சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News