திருச்சி அருகே நடந்து சென்ற கிராம செவிலியரிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
திருச்சி அருகே நடந்து சென்ற கிராம செவிலியரிடம் 5 பவுன் சங்கிலி பறித்தவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சிந்துஜாமேரி.இவர் மரவனூரில் உள்ள அரசுஆரம்ப சுகாதார நிலையத்தில் கிராம சுகாதார செவிலியராக பணியாற்றிவருகிறார்.
நேற்று மாலை பணிமுடித்துவிட்டு வீட்டுக்கு செல்ல சிந்துஜா மரவனூர் பஸ் நிறுத்தம் நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது திருச்சி-திண்டுக்கல் தேசியநெடுஞ்சாலையில் வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சிந்துஜாவிடம் ஒரு வீட்டு முகவரி கேட்டுள்ளனர். இதையடுத்து திடீரென்று அவரது கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியைபறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் அதே மோட்டார் சைக்கிளில் தப்பியுள்ளனர்.
இதுகுறித்து சிந்துஜா கொடுத்தபுகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்துமர்ம ஆசாமிகளை வலைவீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.