மணப்பாறை அருகே வேன் கவிழ்ந்து விபத்து- 4 பேர் காயத்துடன் தப்பினர்

மணப்பாறை அருகே வேன் கவிழ்ந்து விபத்து 4 பேர் உயிர் தப்பினர்.

Update: 2021-11-28 09:44 GMT

மணப்பாறை அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருந்து ஒரு வேன் வந்து கொண்டிருந்தது. திருச்சி -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சியை அடுத்த சொரியம்பட்டி பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரே வந்தபோது, திடீரென ஸ்டேரிங் லாக் ஆனதால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இந்த விபத்து தொடர்பாக வளநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News