திருச்சி அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது
திருச்சி மாவட்டம் புத்தாநத்தம் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;
மணல் திருடியதாக கைது செய்யப்பட்ட இருவர்.
திருச்சி மாவட்டம், புத்தாநத்தம் போலீசாருக்கு அந்த பகுதியில் உள்ள ஒரு ஆற்றுவாரியில் மணல் கடத்துவதாக ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடமான கம்பிளியம்பட்டியில் உள்ள ஆற்றுவாரியில் அனுமதியின்றி திருட்டுத்தனமாக மணல் அள்ளிய வடக்கு இடையபட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி (வயது 54), கம்பிளியம்பட்டியை சேர்ந்த துரைராஜ் (வயது 45) ஆகிய இருவரையும் கைது செய்து புத்தாநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் மணலுடன் இருந்த டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.