வையம்பட்டியில் வாரசந்தை கட்டும் பணியை திருச்சி கலெக்டர் சிவராசு ஆய்வு
வையம்பட்டியில் வாரசந்தை கட்டும் பணியை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகில் உள்ள வையம்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் வார சந்தை மேல் தளம் கட்டுமான பணி நடந்து வருகிறது.இந்த பணியை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிச்சை உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.