திருச்சி: துவரங்குறிச்சி அருகே கார் தலை குப்புற கவிழ்ந்து விபத்து
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே கார் தலை குப்பற கவிழ்ந்த விபத்தில் கணவன் மனைவி அதிர்ஷ்டவசமாக உயர் தப்பினர்.;
திருநெல்வேலியில் இருந்து திருச்சி நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென விபத்துக்குள்ளாகி தலைகுப்புற கவிழ்ந்தது.இந்த விபத்தில் காரில் இருந்த ரவிசங்கர் மற்றும் அவரது மனைவி ஸ்ரீதேவி ஆகியோர் அதிர்ஷ்டவசமக காயம் இன்றி உயிர் தப்பினர்.இது குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.