திருச்சி அருகே காதல் விவகாரத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி அருகே காதல் விவகாரத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2021-10-03 06:30 GMT

தற்கொலை செய்து கொண்ட சபிதா

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி ஸ்டாலின் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி வனிதா. கணவரை பிரிந்து வாழும் இவருக்கு நான்கு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் அவரது 3-வது மகள் சபிதா (வயது 19). பிளஸ் 2 படித்து விட்டு வீட்டில் இருந்தவரை நேற்று  மாலையில் இருந்து காணவில்லை. உடனடியாக அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் வனிதா தனது மகளை காணவில்லை என்று புகார் கொடுக்க சென்றார். அப்போது அவரது செல்போன் எண்ணிற்கு வந்த அழைப்பை எடுத்ததும் அதே இடத்தில் இருந்து கதறி அழுதுக்கொண்டு ஓடினார். இதைப் பார்த்த போலீசார் என்ன என்று கேட்டு விட்டு, அவருடன் முதுகுளம் என்ற இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது இளம்பெண் ஒருவர் அந்த பகுதியில் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தனர்.

இதை பார்த்த வனிதா மற்றும் அவரது பிள்ளைகள் கதறி அழுதனர். இதையடுத்து விசாரித்ததில் சபிதா தான், மரத்தில் தனது சுடிதார் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் இறந்து போன சபிதா ஒரு கடிதம் எழுதி வைத்திருந்ததும், அதில் தன்னுடைய சாவுக்கு காரணம் என்று பெண் ஒருவரின் பெயரை குறிப்பிட்டு அவர்தான் என் அண்ணியிடம் என்னைப்பற்றி தவறாக சொல்லி இருவரையும் பிரித்து வைத்து விட்டதோடு ஒரு ஆணின் பெயரை எழுதி அவரை காதலிக்க வற்புறுத்தினார் என்று எழுதி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதன்படி அந்தக் கடிதத்தையும் துவரங்குறிச்சி  போலீசார் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News