மணப்பாறை அருகே கோவிலில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கியால் பரபரப்பு
மணப்பாறை அருகே கோவிலில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கியால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்து உள்ளது ஆளிப்பட்டி.இங்குள்ள மாரியம்மன் கோவிலில் இன்று காலை ஒரு கைத்துப்பாக்கி மற்றும் ரவை குண்டுகள் உறைகிடந்தது. கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பொதுமக்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக இதுபற்றி மணப்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மணப்பாறை போலீசார் அங்கு வந்து துப்பாக்கி, துப்பாக்கி ரவை உறையையும் கைப்பற்றி ஆய்வு செய்தனர். பின்னர் அதனை திருச்சி மாவட்ட ஆயுதப்படை துப்பாக்கிகள் கையாளும் பிரிவுக்கு அனுப்பி வைத்தனர்.
கோவிலில் துப்பாக்கி கைப்பற்றப்பட்டது மணப்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை யார் இங்கு கொண்டு வந்து வைத்தது என தெரியவில்லை. இந்த கோவில் அருகில் வீரமலை என்று ஒரு இடம் உள்ளது.
அங்கு விலங்கு மற்றும் குருவி வேட்டையாட வந்தவர்கள் யாராவது கவனக்குறைவாக கோவிலில் துப்பாக்கியை வைத்து விட்டு சென்றிருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.அது யாருடைய துப்பாக்கி என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.