மணப்பாறையில் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கான சிறப்பு முகாம்
மணப்பாறையில் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கான சிறப்பு முகாம் இன்று மற்றும் 11ம் தேதி நடைபெறுகிறது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தமிழக அரசின் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் மின் இணைப்புக்கு பதிவு செய்துள்ள விவசாயிகள் பெயர் மற்றும் சர்வே எண் மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
மின் இணைப்புக்கு பதிவு செய்துள்ள விவசாயிகள் காலமாகிவிட்டாலோ அல்லது நிலத்தை விற்பனை செய்திருந்தாலோ அந்த இடத்திற்கு மின் இணைப்பு பெறுவதற்கு பெயர் மாற்றம் மற்றும் சர்வே எண் மாற்றம் செய்ய விவசாயிகளுக்கு தமிழக அரசால் வாய்ப்பு வழங்கப்பட்டு அதற்கான சிறப்பு முகாம் 3 நாட்கள் நடைபெறுகிறது.
அதன்படி மணப்பாறை கோட்டத்தில் உள்ள 15 பிரிவு அலுவலகங்களிலிலும் நேற்று, இன்று மற்றும் 11-ம் தேதி செவ்வாய்கிழமையும் (6, 7-ம் தேதி மற்றும் 11-ம் தேதி) இந்த முகாம் நடைபெறுகிறது.