மணப்பாறை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் பொதுமக்கள் நடமாட தடை

மணப்பாறை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் பொதுமக்கள் நடமாட திருச்சி கலெக்டர் சிவராசு தடை விதித்துள்ளார்.;

Update: 2021-11-18 06:22 GMT

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அணியாப்பூர் கிராமம் வீரமலைப் பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில் 20-ந் தேதி முதல் அடுத்த மாதம் 7-ந் தேதி வரை காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரைதுப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற இருப்பதால், அந்த சமயம் மேற்கண்ட பயிற்சி தளத்தில் மேய்ச்சலுக்காக கால்நடைகள் மற்றும் மனித நடமாட்டம் எதுவும் இருக்கக் கூடாது எனவும், மேலே குறிப்பிட்டுள்ள பயிற்சி தளத்தில் எவரும் பிரவேசிக்கக்கூடாது எனவும் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News