திருச்சி மாவட்ட கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு

திருச்சி மாவட்ட கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

Update: 2022-05-01 16:52 GMT

மணப்பாறை அருகே நடந்த கிராமசபை கூட்டத்தில் அமைச்சர் நேரு பங்கேற்று பேசினார்.

மே தினத்தினை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் 404 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் இன்று (1.5.22) நடைபெற்றது.

மணப்பாறை ஒன்றியம் கண்ணுடையான்பட்டி ஊராட்சியில் முத்தப்புடையான்பட்டியில் இன்று (01.05.2022) நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு  சிறப்புப் பார்வையாளராகப் பங்கேற்று மக்களிடம் கலந்துரையாடி பேசினார்.

அமைச்சர் நேரு பேசும்போது

கிராமசபைக் கூட்டத்தில் மக்கள் பங்கேற்று தங்களது கருத்துக்களைத் தெரிவித்து கிராம வளர்ச்சிக்கு உதவிட வேண்டும். மக்கள் தெரிவிக்கின்ற கருத்துக்களின் அடிப்படையில் கிராமத்தில் வளர்ச்சிப் பணிகள் செயல்படுத்தப்படும். மேலும் மக்கள் இக்கூட்டத்தில் தெரிவித்த கோரிக்கைகளான பேருந்து வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி, பாலம் அமைத்தல், வேலைவாய்ப்பு ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட அரசின் நலத்திட்ட உதவிகள் என அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு ,ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் .பழனியாண்டி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வே.பிச்சை உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) எஸ்.கங்காதாரிணி ஊராட்சித் தலைவர் தங்கமணி ஒன்றியக் குழுத் தலைவர் அமிர்தவள்ளிஇராமசாமி துணைத் தலைவர் புவனேஷ்வரி ஆண்டாள்மணி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News