மணப்பாறையில் போலீசார் சார்பில் பொதுமக்களுக்கு இலவச முக கவசம் வினியோகம்

மணப்பாறையில் போக்குவரத்து போலீசார் சார்பில் ஓமிக்ரோன் பரவலை தடுக்க இலவச முக கவசம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

Update: 2022-01-06 10:47 GMT

மணப்பாறையில் போக்குவரத்து போலீசார் பொதுமக்களுக்கு இலவசமாக முககவசங்களை வழங்கினார்கள்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை போக்குவரத்து காவல்துறை சார்பாக மணப்பாறை மாரியம்மன் கோவில் அருகில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் தலைமையில் பொதுமக்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில் ஒமிக்ரான் மிக வேகமாக பரவுகிறது. ஆனால் அதன் அறிகுறிகள் பற்றி இதுவரை அதிக தகவல்கள் வெளியாக வில்லை. இத்தகைய சூழ்நிலையில், அறிகுறிகளின் அடிப்படையில் இந்த மாறுபாட்டினை நோயாளிகளை அடையாளம் காண்பது மிகவும் கடினமாகி வருகிறது.

எனவே பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். பொது இடத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்பன உள்பட பல்வேறு விழிப்புணர்வுகள் எடுத்துக்கூறப்பட்டது. பின்னர் ஒரு தனியார் அமைப்பு சார்பில் பொதுமக்களுக்கு முககவசம் இலவசமாக வழங்கப்பட்டது.

Tags:    

Similar News