அ.தி.மு.க. மாவட்ட செயலாளருடன் மணப்பாறை நகராட்சி தலைவர் சந்திப்பு
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ப.குமாரை மணப்பாறை நகராட்சி தலைவர் சுதா பாஸ்கரன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.;
மணப்பாறை நகர்மன்ற தலைவர் சுதாபாஸ்கரனுக்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ப.குமார் வாழ்த்து தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை நகர் மன்ற தலைவர் பதவிக்கு நடந்த மறைமுக தேர்தலில் சுதா பாஸ்கரன் வெற்றி பெற்றார். மணப்பாறை நகர்மன்ற தலைவராக பதவி ஏற்றுக்கொண்ட சுதா பாஸ்கரன் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ப. குமாரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது குமார் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
இதில் மணப்பாறை நகர துணைசெயலாளர் பத்தி பாஸ்கரன், சோனா. எத்திராஜ், 12வதுவார்டு உறுப்பினர் சக்தி பெருமாள், மற்றும் பிரபாகரன் ஆகியோர் பங்கேற்றனர்.