மணப்பாறை மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு

மணப்பாறை அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ அப்துல் சமது ஆய்வு செய்தார்.

Update: 2021-05-13 11:30 GMT

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள் கட்டமைப்பு வசதிகள், படுக்கை வசதிகள் - ஆக்ஸிஜன் வசதிகள் குறித்து திமுக கூட்டணியின் மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது ஆய்வு செய்தார்.

தலைமை மருத்துவர் முத்து கார்த்திகேயன் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்தும் கொரோனா நோயாளிகளுக்கு 90 படுக்கை வசதிகள் தயாராக இருப்பதாக சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமதுவிடம் விளக்கமளித்தனர்.

தற்போது கொரோனா நோயாளிகளுக்கு போதுமான ஆக்ஸிஜன் உள்ளதா என்று கேட்டதற்கு 25 சிலிண்டர்கள் இருப்பு உள்ளதாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News