மணப்பாறை பகுதியில் கள்ளச்சந்தையில் மது பாட்டில் விற்ற 5 பேர் கைது
அனுமதியின்றி மது விற்ற 5 பேர் கைது 85 மது பாட்டில்கள் பறிமுதல்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொன்னம்பலப்பட்டி சுங்கச்சாவடி பகுதியில் அரசு அனுமதியின்றி மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வையம்பட்டி போலீசார் அப்பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சுங்கச்சாவடி அருகே உள்ள ஒரு ஓட்டலில் அனுமதியின்றி மது விற்ற வலையபட்டியைச்சேர்ந்த காத்தமுத்து (வயது 55)என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 70 மது பாட்டில்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
அதே போல, லெச்சம்பட்டி பிரிவு சாலை அருகே அனுமதியின்றிமது விற்ற கிடங்குடியை சேர்ந்த வேல்முருகன் (வயது 42), மற்றும் திண்டுக்கல் மாவட்டம் செட்டியபட்டியைச்சேர்ந்த சரவணன் (வயது 39)ஆகியோரை போலீசார் கைது செய்து,அவர்களிடமிருந்து 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மேலும்பழையகோட்டை பிரிவு சாலையில் அனுமதியின்றி மது விற்ற திண்டுக்கல் மாவட்டம், கம்பளியம்பட்டி அருகே உள்ள கூடத்திப்பட்டியை சேர்ந்த ராமச்சந்திரன், கறம்பக்குடியைசேர்ந்த திருமேனி (வயது 37)ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.ஒரே நாளில், அனுமதியின்றி மது பதுக்கி விற்ற5 நபர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 85 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.