மணப்பாறை அருகே ஓடும் பேருந்தில் பயணியிடம் 16 பவுன் நகை திருட்டு
மணப்பாறையை அடுத்த புத்தானத்தம் அருகே ஓடும் பேருந்தில் பயணியிடம் 16 பவுன் நகையை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.;
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தானத்தம் அருகே உள்ள மாலைமடைப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 74). இவர் திருச்சியில் வசித்து வருகிறார்.
இவர் பஸ்சில் திருச்சியிலிருந்து மணப்பாறைக்கு வந்து விட்டு பின்னர் மணப்பாறையில் இருந்து தாதமலைப்பட்டி நோக்கி செல்வதற்கான ஒரு அரசு பஸ்சில் சென்றபோது அவரது பையில் வைத்திருந்த 16 பவுன் நகை மாயமாகி இருப்பது தெரியவந்தது.
பின்னர் இது தொடர்பாக பெருமாள் புத்தானத்தம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.