அமைச்சர் நேரு ரூ.5 கோடி சொகுசு காரில் செல்வது எப்படி? அ.தி.மு.க. கேள்வி
ADMK News in Tamil - அமைச்சர் நேரு ரூ.5 கோடி சொகுசு காரில் செல்வது எப்படி? என அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் குமார் கேள்வி எழுப்பினார்.
ADMK News in Tamil -தமிழகத்தில் மின் கட்டண உயர்வு மற்றும் தி.மு.க. அரசை கண்டித்து திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க.சார்பில் மணப்பாறை பெரியார் சிலை அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ப.குமார் தலைமை தாங்கினார்.
இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரசேகர், சின்னச்சாமி, நகர செயலாளர் பவுன்ராமமூர்த்தி, 11 ஒன்றிய செயலாளர்கள், 10 பேருராட்சி செயலாளர்கள், 4 மாவட்ட பொருப்பாளர்கள் உட்பட ஏராளமான அ.தி.மு.கழக நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ப குமார் பேசும் போது மின் வாரியத்தை சீர்திருத்தம் செய்யுங்கள் - என மத்திய அரசு கூறியதற்கு ஏற்ப மின் உற்பத்தி நிலையங்களை மேம்படுத்தாமல், மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது விடியா தி.மு.க. அரசு.அடுத்த ஆட்சி அ.தி.மு.க. தான். நாடாளுமன்ற தேர்தலிலேயே மக்கள் தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இறக்குமதியாக உள்ள, விலையே நிர்ணயம் செய்யாத, 5 கோடி ரூபாய் சொகுசு காரில் அமைச்சர் கே.ன்.நேரு செல்கிறார். அவரது கல்லூரிக்கு கடன்பாக்கி காரணமாக ஜப்தி நோட்டீஸ் அனுப்பிய நிலையில், யார் பணத்தில் ரூ. 5 கோடிக்கு கார் வந்தது.
திருச்சி பஞ்சப்பூரில் புதிய பேருந்துநிலையம், திருச்சி மாநகராட்சியின் ரூ. 50 கோடி மக்கள் வரி பணத்தில் ரூ. 20 கோடிக்கு கிராவல் மண் நிரப்புவதாக டெண்டர் விடப்பட்டதை மறைத்து, திருச்சி குளங்களில் இருந்து எடுக்கப்படும் வண்டல் மண்களை கொண்டு புதிய பேருந்து நிலையம் கட்ட அடித்தளத்திற்கான மண் நிரப்பப்படுகிறது.
கே.என்.நேருவின் இடங்கள், சொத்துக்கள் புதிய பேருந்துநிலையம் அமைய உள்ள இடத்தை சுற்றி உள்ளது. இவை அதிக விலைபோகும் என்ற கணக்கில் பாதுகாப்பில்லாத பேருந்து நிலையத்தை கொண்டுவரப் பார்க்கிறார். அவரது சுயநலத்திற்கு திருச்சி மாவட்ட ஆட்சியரும், மாநகராட்சி ஆணையரும் உடந்தையாக, துணைபோகக் கூடாது என்றார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2