மணப்பாறை அருகே நிதி நிறுவன அதிபரை பீர் பாட்டிலால் தாக்கிய 3 பேர் கைது

மணப்பாறை அருகே முன் விரோதம் காரணமாக பைனான்சியரை பீர் பாட்டிலால் தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-11-16 08:36 GMT

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகேயுள்ள வைரம்பட்டியை சேர்ந்தவர் துரையரசன் (வயது 45). நிதி நிறுவன அதிபர். நேற்று  மாலை முன் விரோதம்காரணமாக வையம்பட்டி அண்ணா நகர்பகுதியை சேர்ந்த ஷாஜகான் (வயது 42), வடக்கு தெருவை சேர்ந்த சாதிக்பாட்சா (வயது 50)மற்றும் கிழக்கு தெருவைசேர்ந்த முகமதுஆசாத் (வயது 34)ஆகிய மூவரும் தகாதவார்த்தைகளால் திட்டி, பீர் பாட்டிலால் தாக்கியதில் துரையரசன் காயமடைந்தார். இது குறித்து,வையம்பட்டி போலீசில் துரையரசன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News