திருச்சி:வையம்பட்டியில் வாக்குப்பெட்டிகளை கலெக்டர் சிவராசு ஆய்வு

திருச்சி மாவட்டம் வையம்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் வாக்குப்பெட்டிகளை கலெக்டர் சிவராசு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2021-09-29 14:04 GMT

திருச்சி மாவட்டம் வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இடைத்தேர்தலுக்கு தயார் நிலையில் உள்ள வாக்குப்பெட்டிகளை கலெக்டர் சிவராசு ஆய்வு செய்தார்.

திருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவி இடங்களுக்கு அக்டோபர் மாதம் 9ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. லால்குடி ஊராட்சி ஒன்றியம் சிறு மருதூர், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம் கீழரசூர் ஆகிய ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும் ,துறையூர் ஊராட்சி ஒன்றியம் 13-வது வார்டு ,மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம் 10-வது வார்டு மற்றும் வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம் 6-வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் பதவிகளுக்கும், இதுதவிர 19 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் என மொத்தம் 24 பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதில்   சில வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு விட்டதால் மற்ற பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு இன்று வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்றார். அங்கு தயார் நிலையில் உள்ள வாக்கு பெட்டிகளையும், அது தொடர்பான ஆவணங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ரேவதி, அண்ணாதுரை, பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News