மணப்பாறை அருகே கார் கண்ணாடியை உடைத்து பணம், காசோலை திருட்டு

மணப்பாறை அருகே கார் கண்ணாடியை உடைத்து, பணம், காசோலையை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update: 2021-11-16 09:06 GMT
கண்ணாடி உடைக்கப்பட்ட கார்மணப்பாறை அருகே கார் கண்ணாடியை  உடைத்து பணம், காசோலை திருட்டு
  • whatsapp icon

திருச்சியில் உள்ள தனியார் உரம்,பூச்சி மருந்து விநியோக நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதிகளாக ஆனந்தகுமார் (வயது 30),தனபால் (வயது 29 ) ஆகியோர் பணியாற்றிவருகின்றனர். அவர்கள் இருவரும் மணப்பாறை பகுதியில் உள்ள உரக்கடைகளில் விநியோகம் செய்யப்பட்ட பொருட்களுக்கான பணத்தை வசூலித்து விட்டு,துவரங்குறிச்சியில் காரை நிறுத்தி விட்டு ஓட்டல் ஒன்றில் சாப்பிட சென்றுள்ளனர்.

அப்போது பலத்த மழை பெய்துகொண்டிருந்தது. இந்நிலையில் சாப்பிட்டுவிட்டு காருக்கு திரும்பிய இருவரும் காரை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தனர். கார் கண்ணாடி உடைக்கப்பட்டு உள்ளே வைக்கப்பட்டிருந்த ரூ.1.41 லட்சம்பணம் மற்றும் காசோலைகள் திருட்டு போயிருந்தது. இது குறித்து துவரங்குறிச்சி போலீஸ் நிலையத்தில்  புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News