வையம்பட்டியில் உணவு வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்

வையம்பட்டியில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவு வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.;

Update: 2022-06-19 12:22 GMT

கூட்டத்தில் பங்கேற்ற உணவு வணிகர்களுக்கு திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி டாக்டர் ரமேஷ் பாபு சான்றிதழ் வழங்கினார்.

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் வையம்பட்டி உணவு வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி டாக்டர் ரமேஷ் பாபு தலைமை தாங்கினார். இதில் உணவுக் கலப்படம் இல்லாமல் பொருட்களை விற்பனை செய்வது பற்றியும் கலப்பட பொருட்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் பற்றியும் ரமேஷ்பாபு எடுத்துக் கூறினார். இந்த கூட்டத்தில் வையம்பட்டி பகுதியைச் சேர்ந்த உணவு வணிகர்கள் சுமார் 150 பேர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News