திருச்சியில் முதியவர் அடித்துக்கொலையா? போலீஸ் விசாரணை
திருச்சியில், முதியவர் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா என, உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.;
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகில் உள்ள முக்கண் பாலம் எனும் இடத்தில் சிவாலயம் உள்ளது. அங்கு, சுமார் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் அடித்துக்கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதுகுறித்து அவ்ழியாக சென்றவர்கள் துவரங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த துவரங்குறிச்சி போலீசார், தடயவியல் நிபுணர் குழு, மற்றும் மோப்பநாய் உதவியுடன் விசாரணை செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து இறந்து கிடந்த முதியவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அடித்துக்கொலை செய்தார்களா? இறந்தவர் யார்? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.