வையம்பட்டி அருகே மணல் திருடிய 3 பேர் கைது -2 வாகனங்கள் பறிமுதல்

திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே மணல் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2022-01-08 11:10 GMT

வையம்பட்டி காவல் நிலையம் (பைல் படம்).

திருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்த வடக்கு அஞ்சல்காரன்பட்டி அருகே சிலர் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதாக வையம்பட்டி போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு பொக்லைன் எந்திரம் மூலம் சிலர் மணல் அள்ளி டிராக்டரில் ஏற்றுவது தெரியவந்தது.

இதுதொடர்பாக வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்ததுடன் மணல் திருட்டில் ஈடுபட்ட வடக்கு அஞ்சல்காரன்பட்டியைச் சேர்ந்த அலெக்ஸ்ராஜ் (வயது 22), விக்னேஷ்வரன் (20), மூரம்பட்டியைச் சேர்ந்த வேலுச்சாமி (38) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும், 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News