திருச்சி அருகே நள்ளிரவில் 2 லாரிகள் மோதிக்கொண்டதில் 2 பேர் உயிரிழப்பு

திருச்சி அருகே நள்ளிரவில் 2 லாரிகள் மோதிக்கொண்டதில் வடமாநிலத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர்.

Update: 2022-08-11 04:26 GMT

துவரங்குறிச்சி அருகே 2 லாரிகள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் ஒரு லாரி தீ பிடித்து எரிந்தது.

அரியலூரில் இருந்து சிமெண்ட் லோடு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சி அருகே இந்த லாரி சென்ற போது தூத்துக்குடியில் இருந்து காற்றாலை உபகரணங்கள் ஏற்றி செல்வதற்காக வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. நேற்று நள்ளிரவில் நடந்த இந்த விபத்தில் இரண்டு லாரிகளும் தீப்பிடித்து எரிய தொடங்கின.

இது பற்றிய தகவல் அறிந்ததும் மணப்பாறை மற்றும் துவரங்குறிச்சியில் இருந்து தீயணைப்படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருந்தாலும் இந்த விபத்தில் டிரைலர் லாரி ஓட்டுநர் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இந்திரா மணிப்பால், கிளீனர் பவன் பட்டேல் ஆக இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். துவரங்குறிச்சி போலீசார் இது பற்றி ஒரு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நள்ளிரவில் ஏற்பட்ட இந்த கோரபத்தினால் திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News