திருச்சி அருகே பிடிபட்ட 10 அடி நீள மலைபாம்பு: வனப்பகுதியில் விடுவிப்பு

திருச்சி மணப்பாறை அருகே விவசாயி கிணற்றில் பிடிபட்ட 10 அடி நீளமுள்ள மலைபாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.

Update: 2022-02-10 08:00 GMT

பிடிபட்ட 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு.

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள கரிசல்பட்டி கிராமத்தை சேர்ந்த காதர்மைதீன். இவருக்கு சொந்தமாக விவசாய நிலத்தில் 40 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது.

இந்நிலையில் அந்த கிணற்றில் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று உயிருடன் இருப்பதை கண்டு காதர்மைதீன் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறித்து துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

இந்த தகவலையடுத்து, துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் கிடந்த மலைப்பாம்பை உயிருடன் மீட்டு வனத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அந்த மலைப்பாம்பை பாதுகாப்பாக வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

Tags:    

Similar News