மணப்பாறை வளமிக்கதாக மாற்றுவேன்: தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணகோபால் பேச்சு.

திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் அமமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணகோபால் தொகுதியை வளமிக்கதாக மாற்றுவேன் என உறுதி கூறினார்.;

Update: 2021-03-22 07:45 GMT

திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதியின் அமமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று தனியார் மண்டபத்தில் நடந்தது. அப்போது தேமுதிக வேட்பாளர் வக்கீல் கிருஷ்ணகோபால் பேசுகையில்.,

நான் வெற்றிபெற்றால் கடந்த 10 ஆண்டுகளில் செய்ய முடியாத பணிகளை 5 ஆண்டுகளில் நிறைவேற்றுவேன். யாரையும் குறைகூறி வாக்கு கேக்கவேண்டாம், நாம் செய்யவேண்டியதை சொல்லி வாக்கு கேப்போம், திமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர் எந்த ஊரை சேர்ந்தவர் என்றே தெரியாது. ஆனால் நாம் பதவியில் இல்லாவிட்டாலும் பனியன் தொழிற் சாலை கொண்டுவந்தோம்.

அதில் இப்பகுதியை சேர்ந்த 2 ஆயிரம் பேர் பணியாற்றி பயனடைந்து வருகின்றனர். அரசியலில் ஒரு ரூபாய் சம்பாதிக்க விரும்பவில்லை. ஊழல் செய்ய மாட்டேன். மக்களுக்காக உழைக்க தயாராக இருக்கிறேன். மணப்பாறை தொகுதியை வளமிக்க பகுதியாக மாற்றுவேன். மணப்பாறையில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்க ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கபட்டு, அதில் ரூ.40 லட்சம் சுரண்டபட்டது இவ்வாறு பேசினார். இந்த அறிமுக கூட்ட நிகழ்ச்சியில் அமமுக, தேமுதிக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.




Tags:    

Similar News