இறந்தவர் உடலை ஊருக்குள் கொண்டுவர கிராம மக்கள் எதிர்ப்பு

Update: 2021-05-13 16:30 GMT

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே கல்பாளையத்தான்பட்டியை சேர்ந்தவர் ராயப்பன் (82) இவர், தனது குடும்பத்துடன் கர்நாடக மாநிலம் பெங்களூரில் வசித்து வந்தனர். இந்நிலையில் ராயப்பன் வயது முதிர்வு காரணமாக உடல் நிலை பாதிக்கபட்டு பெங்களூரில் உயிரிழந்தார்.

பின்னர், உயிரிழந்த ராயப்பன் உயிரோடு இருக்கும்பொழுது தனது மகன்களிடம் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய கூறினாராம். இதையடுத்து, அவரது மகன்கள் மற்றும் உறவினர்களும் ராயப்பனின் விருப்பப்படி முடிவு செய்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்ட உடலை கொரோனா அச்சம் காரணமாக ஊருக்குள் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த மணப்பாறை போலீசார், சம்பவயிடத்துக்கு சென்று இறப்புக்காண காரணத்தை தெளிவுபடுத்தி பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து ராயப்பனின் வீட்டின் முன்பு சிறிது நேரம் அஞ்சலிக்காக வீட்டின் முன்பு வைத்து பின்னர் உடலை அடக்கம் செய்தனர்.

Tags:    

Similar News