திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
திருச்சி அருகே இருசக்கர வாகனம் மீது பால் வேன் மோதிய சாலை விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுகா தீராம்பாளையத்தில் இருந்து பால் ஏற்றிக்கொண்டு பால்வாகனம் சென்றது. இந்த வாகனம் எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த அழகியமனவாளம் கைகாட்டியை சேர்ந்த ரமேஷ் (வயது 37) என்பவர் சம்பவம் இடத்திலேயே இறந்தார். இருசக்கர பின்னால் அமர்த்திருந்த உளுந்தங்குடி வடக்குதோட்டம் சேர்ந்த ராஜமாணிக்கம்(வயது 50) என்பவர் கடுமையான காயங்களுடன் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பட்டார்.
சம்பவ இடத்திற்கு வந்த மண்ணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் விபத்துகுறித்து விசாரணை செய்து இறந்தவரின் உடலை கைப்பற்றி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.