திருச்சி அருகே மாவட்ட ஆட்சியரின் காரை மறித்து கிராம மக்கள் மனு
திருச்சி அருகே மாவட்ட ஆட்சியரின் காரை மறித்து கிராம மக்கள் மனு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் சிறப்பு பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வருகை தந்தார். அப்போது அப்பகுதி மக்கள் அவரது காரை வழிமறித்து மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், மண்ணச்சநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாரதி நகர், காந்தி நகர்,பி எஸ் ஏ நகர் பகுதியில் நீண்டகாலமாக சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.பாரதிநகரில் தனி நபர் ஒருவரின்காலி மனையில் மிகப்பெரிய தனியார் செல்போன் கோபுரம் அமைப்பதற்கான பணிகள் பொக்லைன் மூலம் நடைபெற்று வருகிறது.
இந்த டவர்அமைக்கப்பட்டால் இப்பகுதி கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும். மேலும் டவர் அமைக்கும் இடம் அருகே குழந்தைகளின்விளையாட்டு மைதானம் உள்ளது.எனவே செல்போன் டவர் இப்பகுதியில் வராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். திருச்சி மாவட்ட ஆட்சியரின் காரை மறித்து கிராம மக்கள் மனு கொடுத்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.