திருச்சியில் அ.தி.மு.க.வில் ஐக்கியமான அ.ம.மு.க. இளைஞர் அணியினர்
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.ம.மு.க. இளைஞர் அணியினர் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக்கொண்டனர்.;
திருச்சி புறநகர் வடக்கு மாவட்டஅ.ம.மு.க. இளைஞர் அணி செயலாளர் நந்தினி வி.சரவணன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட அ.ம.மு.க.வினர் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி முன்னிலையில் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சிவபதி. முன்னாள் அமைச்சர் பூனாட்சி,ஜெ.பேரவை இணைச் செயலாளர் செல்வராசு. மாவட்ட அவைத் தலைவர் பிரின்ஸ் தங்கவேல், முன்னாள் மாவட்ட கழக செயலாளர் சுப்பு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ரத்தினவேல், மல்லிகா சின்னச்சாமி மற்றும் ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, கிளை, வார்டு கழக நிர்வாகிகள், சார்பு அணி செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.