முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திருச்சி பரஞ்சோதி பிறந்த நாள் வாழ்த்து

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்த தினத்தையொட்டி திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் வாழ்த்து தெரிவித்தார்.

Update: 2021-05-12 17:00 GMT

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக பிறந்தநாள் விழாவை அதிமுகவினர் விமரிசையாக கொண்டாடவில்லை.இதைத்தொடர்ந்து அதிமுக மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிமுகவினர் பலரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொலைபேசி மூலமும், இணையதளம் மூலமும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த வகையில் அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி பிறந்தநாள் கொண்டாடும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News