மண்ணச்சநல்லூரில் ஊராட்சி தலைவர்களுடன் எம்எல்ஏ கதிரவன் ஆலோசனை

மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஊராட்சி தலைவர்களுடன் எம்எல்ஏ கதிரவன் ஆலோசனை செய்தார்.;

Update: 2021-05-28 03:15 GMT
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் ஊராட்சி தலைவர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எம்எல்ஏ கதிரவன் ஆலேசனை செய்தார்.

மண்ணச்சநல்லூர் தொகுதியில் 35 கிராம ஊராட்சிகள் உள்ளது. தற்போது கொரோனா தொற்றின் 2 ம் அலை வேகமாக பரவி வருவதால் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவது, அனைவரையும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள செய்து, பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை ஊராட்சி தலைவர்கள் மூலம் செய்வது எப்படி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மண்ணச்சநல்லூர் தொகுதி எம்எல்ஏ கதிரவன் ஊராட்சி மன்ற தலைவர் களுடன் ஆலோசனை செய்தார்.

இந நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர் ஸ்ரீதர், துணைசேர்மன் செந்தில், திமுக ஒன்றிய செயலாளர் செந்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News