திருச்சியில் 6 யானைகளுக்கு கொரோனா பரிசோதனை

திருச்சி மாவட்டம் எம்.ஆர்.பாளையத்தில் உள்ள யானைகள் காப்பகத்தில் உள்ள யானைகளுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது.;

Update: 2021-06-12 07:24 GMT

திருச்சி மாவட்டம் எம்.ஆர். பாளையத்தில் உள்ள யானைகள் காப்பகத்தில் யானைகளுக்கு நடந்த கொரோனா பரிசோதனை.

சென்னையில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் வன உயிரியல் பூங்காக்களில் உள்ள பல்வேறு விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வனத்துறை மருத்துவர்கள் சார்பில் இந்தப் கொரோனா பரிசோதனைக்கான மாதிரிகள் விலங்குகளிடம் இருந்து சேகரிக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள எம்.ஆர். பாளையத்தில் யானைகள் மறுவாழ்வு மையம் அமைந்துள்ளது.

அங்கு உள்ள ஆறு யானைகளுக்கு வன கால்நடை மருத்துவர் சுகுமார் பரிசோதனைக்காக மாதிரிகளை சேகரித்தார். யானைகள் மறுவாழ்வு மையத்தில் உள்ள ஆறு யானைகளான மலாச்சி, இந்து, சந்தியா, ஜெயந்தி, கோமதி, ஜமீலா என பெயரிடப்பட்டுள்ள யானைகளிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News