திருச்சி மாவட்ட பேரூராட்சிகளின் 214 பதவியிடங்களுக்கு 793 பேர் போட்டி

திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 பேரூராட்சிகளின் 214 பதவியிடங்களுக்கு 793 பேர் போட்டியிடுகின்றனர்.

Update: 2022-02-07 15:50 GMT

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 14 பேரூராட்சிகள் உள்ளன. இந்த பேரூராட்சிகளில் உள்ள மொத்த வார்டுகளின் எண்ணிக்கை 216. ஆக 216 பதவியிடங்களுக்கு 890 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதில் வேட்பு மனுக்கள் பரிசீலனையின்போது 5 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 90 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். 2 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

இதனை தொடர்ந்து 214 பதவியிடங்களுக்கு போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த போட்டியில் 793 வேட்பாளர்கள் இறுதி பட்டியலில்  உள்ளனர்.



Tags:    

Similar News