மண்ணச்சநல்லூர் ஜமாபந்தியில் திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் பங்கேற்பு
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் நடந்த ஜமாபந்தியில் கலெக்டர் பிரதீப்குமார் பங்கேற்றார்.;
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமா பந்தி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பங்கேற்று கணக்குகளை ஆய்வு செய்தார். பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் இரண்டு பயனாளிகளுக்க பட்டாக்களையும் வழங்கினார். மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் சக்திவேல் முருகன் மற்றும் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.