சமயபுரம் கோவிலில் பக்தர்களை காக்க முயன்றவர் பாம்பு கடித்து சாவு

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்களை காக்க முயன்றவர் நல்லபாம்பு கடித்து இறந்தார்.;

Update: 2022-02-24 10:00 GMT

பாம்பு கடித்ததில் இறந்த ராஜா.

திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன்கோயில் உலகளவில் பிரசித்திபெற்ற கோயிலாகும்.

இந்த கோயிலில் வருடத்தில் 365 நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் இன்று ரூ. 250 டிக்கெட் கவுண்டர்பகுதியில் இருந்து திடீர் என்று பக்தர்கள் அலறி அடித்து ஓடும்சத்தம் கேட்டுள்ளது.பக்தர்களின்அலறல் சத்தம்கேட்டு, கோயில்நிர்வாகிகளும்,காவலாளிகளும் அங்கு ஓடி வந்துபார்த்த போது நல்லபாம்பு ஒன்றுபக்தர்கள் கூட்டத்திற்குள்புகுந்தது தெரிய வந்தது.

இது குறித்துதீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில்அந்த பாம்புகோயில் பகுதியில் விரைவாக ஊர்ந்துசென்றதால், பக்தர்கள் அங்கும், இங்கும்சிதறி ஓடினர். இதனை கண்டதுறையூர் பகுதியைசேர்ந்த ராஜா (வயது 60) என்பவர் பக்தர்களை காக்கும் பொருட்டு, அந்த பாம்பை ஓடிச்சென்று அமுக்கி பிடித்து கையில் எடுத்துள்ளார். கையில் பிடித்தபாம்பை அப்படியே கோயிலுக்கு வெளியில் எடுத்து சென்று தீயணைப்புதுறையினர்வருகைக்காககாத்திருந்தார். அந்த நேரத்தில்நல்ல பாம்பு ராஜாவின் வலது கையில் கடித்தது.

இருப்பினும் வலியை தாங்கிகொண்ட ராஜா, இடது கையில் பாம்பை பிடித்துள்ளார். அப்போதும்இடது கையை கடித்துள்ளது. இருப்பினும் மீண்டும் பாம்பு கடித்ததில் வலியை தாங்கிகொண்டே, ராஜா அப்படியே நின்றுள்ளார். இதனை கண்ட பொதுமக்கள்உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு தகவல்தெரிவித்தனர்.தீயணைப்புதுறையினர் விரைந்து வந்தனர்பின்பு அந்த நல்லபாம்பை தியணைப்பு துறையினரிடம் ஒப்படைத்து விட்டு சிகிச்சை பெறுவதற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன் மூலம் ராஜாவை கொண்டு  சென்றார்.

இந்நிலையில் ராஜாவுக்கு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைஅளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி ராஜா உயிரிழந்தார். அவரின் இறப்பு குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து பக்தர்கள் கூறுகையில் கோயிலில் அடிக்கடி இது போன்று பாம்பு வருவது வழக்கம் தான். கடந்த 2 மாதங்களுக்கு முன்பும் இது போன்ற சம்பவம் நடந்தது என்று தெரிவித்தனர்.

Tags:    

Similar News