சமயபுரம் மாரியம்மன் கோவில்- கட்டுப்பாடு தளர்வால் பக்தர்கள் குவிந்தனர்

கொரோனா கட்டுப்பாடு தளர்வால் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இன்று பக்தர்கள் குவிந்தனர்.

Update: 2022-01-28 16:01 GMT

தை மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையான இன்று சமயபுரம் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் முதன்மையானது திருச்சிமாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில். தை 3வது வெள்ளிக்கிழமை என்பதால் இன்று அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள் பாலித்தார்.

ஏற்கனவே கடந்த மாதம் 6ம் தேதியில் இருந்து வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கொரோனா பரவலை தடுப்பதற்காக வழிபாட்டு தலங்களுக்கு  பிறப்பிக்கப்பட்டிருந்த தடை  கட்டுப்பாடுகளில் இருந்து தற்போது தளர்வு அறிவிக்கப்பட்டு இருப்பதால் இன்று சமயபுரம் மாரியம்மன்கோவிலில் பக்தர்கள் ஏராளமான அளவில் குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News