சமயபுரம் மாரியம்மன் கோவில் பெருந்திட்ட வளாக பணி துவக்கம் பற்றிய ஆய்வு
சமயபுரம் மாரியம்மன் கோவில் பெருந்திட்ட வளாக பணி துவக்கம் பற்றிய ஆய்வு நடைபெற்றது.;
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் பெருந்திட்ட விரிவாக்கப் பணி மேற்கொள்ளப்படவுள்ளதையொட்டி விரிவாக்கம் செய்வதற்கான இடங்களையும், மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டப் பணிகள் குறித்தும் இந்து சமய அறநிலைத்துறை, சுற்றுலா மற்றும் கலை பண்பாட்டுத் துறை அரசு முதன்மைச் செயலாளர் பி.சந்திரமோகன், மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதனைத் தொடர;ந்து, சமயபுரம் திருக்கோயிலில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளையும், பேருந்து நிலையப் பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அன்னதானக் கூடத்தில் ஆய்வு செய்த அரசு முதன்மைச் செயலாளர் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதான உணவின் தரத்தினை சாப்பிட்டுப் பார்த்து பரிசோதித்தார். பக்தர்களுக்கு சிறப்பான வசதிகளை செய்து தரும் வகையில், கோயில் விரிவாக்கப் பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்கான அறிவுரைகளையும் அரசு முதன்மைச் செயலாளர் வழங்கினார்.
இந்நிகழ்வின் போது, சமயபுரம் கோவில் இணை ஆணையர் சி.கல்யாணி மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.