திருச்சி எம்.ஆர்.பாளையம் மறுவாழ்வு மையத்தில் 8 யானைகள் பராமரிப்பு
திருச்சி அருகே எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் தற்போது 8 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.;
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலயைில் சிறுகனூர் அருகே எம்.ஆர்.பாளையத்தில் வன உயிரியல் பூங்கா உள்ளது. இங்குள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தில் தற்போது 8 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டம் கோழிகமுத்தியிலுள்ள முகாமில், தனியாரிடமிருந்து மீட்கப்பட்ட ரோகிணி என்ற 60 வயது யானை பராமரிக்கப்பட்டு வந்தது. அந்த யானை சில நாட்களுக்கு முன்பு அங்கிருந்து எம்.ஆர். பாளையத் திலுள்ள யானைகள் மறுவாழ்வு மையத்துக்கு கொண்டு வரப்பட்டது. மாவட்ட வனத்துறை கோவை மாவட்ட கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார் தலைமையிலான மருத்துவக் குழுவினரும் இங்கு முகாமிட்டு யானை ரோகிணியின் உடல்நலத்தைக் கண்காணித்து வருகின்றனர்.
மேலும் விருதுநகர் மாவட்டம். ராஜபாளையத்திலிருந்து இந்திரா என்கிற லட்சுமி என்ற 25 வயது யானையும் நேற்று முன்தினம் இரவு எம்.ஆர்.பாளையம் முகாமிற்கு பராமரிப்புக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. இப்போது எம்.ஆர்.பாளையம் காப்பகத்தில் 8 பெண் யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.