திருச்சி அருகே சமுதாய வளைகாப்பு விழாவில் அமைச்சர் நேரு பங்கேற்பு
திருச்சி அருகே நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் அமைச்சர் நேரு பங்கேற்று கர்ப்பிணிகளை வாழ்த்தினார்.;
திருச்சி அருகே நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் பங்கேற்ற கர்ப்பிணிகளுக்கு அமைச்சர் நேரு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.
திருச்சி அருகே நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் அமைச்சர் நேரு பங்கேற்று கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி வாழ்த்தினார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், ச.கண்ணணூர் பேரூராட்சியில், கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.346 இலட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தை மேம்பாட்டுப் பணிகளையும், மண்ணச்சநல்லூர் பேரூராட்சிகளில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.170 இலட்சம் மதிப்பீட்டில் அறிவுசார் மையக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளையும், கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் மற்றும் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.27 இலட்சம் மதிப்பீட்டில் மண்ணச்சநல்லூர் பேரூராட்சி பி.எஸ்.ஏ.நகரில் பூங்கா மேம்பாட்டுப் பணிகளையும் என ரூ.543 இலட்சம் மதிப்பீட்டில் 3 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளை தமிழக நகராட்சி நிரவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று 06.01.2023 தொடங்கி வைத்து பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி பெண்களின் வாழ்க்கை தரம் முன்னேற்றத்திற்காகவும், பெண்கல்வியை ஊக்கப்படுத்திடவும் எண்ணற்ற பெண்கள் சார்ந்த நலத்திட்டங்களை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக கர்ப்பிணித் தாய்மார்களின் நலம் காக்கவும், தாய்சேய் நலனை மேம்படுத்துவதற்கும், "சமுதாய வளைகாப்பு" எனும் சமுதாய விழிப்புணர்வு நிகழ்வினை தமிழக அரசால் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் நடத்தப்பட்டு இதன் மூலம் சாதி, மத வேறுபாடின்றி அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களும், இத்திட்டத்தின் வாயிலாக பயன்பெற்று வருகின்றனர்.
அதனடிப்படையில், திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஸ்ரீதனலட்சுமி மஹாலில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் தாய்சேய் நலனை மேம்படுத்துவதற்கு "சமுதாய வளைகாப்பு நிகழ்வு" பாரம்பரிய முறையில்;100 கர்ப்பிணி பெண்களுக்கு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு தட்டு, மஞ்சள், குங்குமம், பூ பழம் மற்றும் பொன்னான ஆயிரம் நாட்கள் குறித்த மடிப்பேடு அடங்கிய சீர்வரிசைப் பொருட்களை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு வழங்கி கர்ப்பிணிகளை மலர்கள் தூவி வாழ்த்தினார். இதனைத் தொடர்ந்து, அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் உடல் எடை மற்றும் இரத்த அழுத்தம் பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு 5 வகையான கலவை உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வுகளில், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர்அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தர பாண்டியன், ஸ்டாலின்குமார், தியாகராஜன், பழனியாண்டி, கதிரவன், மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன், மண்ணச்சநல்லூர் ஒன்றியக் குழுத் தலைவர் ஸ்ரீதர்,இலால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன், உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) காளியப்பன், மாவட்ட திட்ட அலுவலர் ரேணுகா, மாவட்ட சமூக நல அலுவலர் நித்யா, பேரூராட்சித் தலைவர்கள் சிவசண்முகக் குமார்,ரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.