வையம்பட்டியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாக்கு சேகரிப்பு

தி.மு.க. ஒன்றிய கவுன்சில் வேட்பாளருக்கு ஆதரவாக வையம்பட்டியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாக்கு சேகரித்தார்.

Update: 2021-10-07 07:33 GMT

வையம்பட்டியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிரசாரம் செய்தார்.

திருச்சி மாவட்டம் வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம் 6-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அக்டோபர் 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக செல்லமணி போட்டியிடுகிறார்.

அவருக்கு ஆதரவாக திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கிராமம், கிராமமாக வாக்கு சேகரித்தார். அமயபுரம், மலையடிப்பட்டி, சரவணம்பட்டி, இனாம் கோவில்பட்டி ஆகிய இடங்களில் வீடு, வீடாக சென்று தி.மு.க. வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அமைச்சருடன் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் கே. என். சேகரன், வையம்பட்டி ஒன்றியத் தலைவர் குணசேகரன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் சென்றிருந்தனர்.

Tags:    

Similar News