மண்ணச்சநல்லூர் தொகுதியில் புதிய மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி : அடிக்கல் நாட்டிய எம்எல்ஏ கதிரவன்

மண்ணச்சநல்லூர் தொகுதி கோமங்கலம் ஊராட்சியில் ரூ 14 லட்சம் மதிப்பில் புதிய மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி கட்டுவதற்கு எம்எல்ஏ கதிரவன் அடிக்கல் நாட்டினார்.

Update: 2021-06-15 02:30 GMT

மண்ணச்சநல்லூர் தொகுதி கோமங்கலம் ஊராட்சியில்  ரூ 14  லட்சத்தில் புதிய மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் பணியை எம்எல்ஏ கதிரவன் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார்.

திருச்சி வடக்கு மாவட்டம்  மண்ணச்சநல்லூர் தொகுதி முசிறி மேற்கு ஒன்றியம் கோமங்கலம் ஊராட்சி காவேரிப் பாளையத்தில்,புதிய போர்வெல் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க அடிக்கல் நாட்டி, பணியை எம்எல்ஏ கதிரவன் தொடங்கிவைத்தார்.

கோமங்கலம் ஊராட்சியில்  காவேரி பாளையத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்க ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இதனையடுத்து புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏ கதிரவனிடம் தெரிவித்தனர்.

சட்டமன்ற உறுப்பினர் கதிரவனின் முயற்சியால் ரூ 14 லட்சத்தில் போார்வெல் அமைத்து,30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுக் கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. 

இன்று இந்த பணியின் தொடக்கவிழா நடைபெற்றது. இதில்  முசிறி மேற்கு ஒன்றிய செயலாளர் சு.ராமசந்திரன், முசிறி கிழக்கு ஒன்றிய செயலாளர் காட்டுகுளம் கணேசன், முசிறி ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவர்மாலா ராமச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர் கிருத்திகா தனபால், கோமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் உஷா ரமேஷ் மற்றும்  திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்

Tags:    

Similar News