இனாம் சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவில் மாசி தேரோட்டம் கோலாகலம்

இனாம் சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவில் மாசி தேரோட்டம் கோலாகலமாக இன்று நடந்தது.

Update: 2022-02-27 07:22 GMT
ஆதிமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.

தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் முதன்மையானது திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில்/ திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் இந்த சக்திமிகு ஆலயம் உள்ளது. சமயபுரம் மாரியம்மனின் மூல கோவிலாக கருதப்படுவது ஆதி மாரியம்மன் கோவில். இனாம் சமயபுரத்தில் அமைந்துள்ளது இக்கோவில்.


ஆரம்ப காலத்தில் இங்கு இருந்த அம்மனின் சக்தியை பிடி மண் மூலம் எடுத்து வந்து சமயபுரத்தில் நிறுவியதாக கோவில் தல வரலாறு கூறுகிறது. இத்தகைய சக்திமிகு ஆதி மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.

இந்த நிலையில் ஆதி மாரியம்மன் கோவில் மாசித் தேரோட்டம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அந்த கிராம மக்கள் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து அம்மனை தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News