சிறுகனூர் அருகே 66 ஆடுகள் திருடிய 2 பேர் கைது: சரக்கு வேன், கார் பறிமுதல்

சிறுகனூர் அருகே ஆடுகள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டு சரக்கு வேன், கார் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2021-12-30 05:00 GMT

சிறுகனூர் பகுதியில் நேற்று டி.ஐ.ஜி.யின் தனிப்படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து திருப்பட்டூர் செல்லும் சாலையில் ஒரு கார் மற்றும் ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் ஆடுகளை திருடி சென்றது தெரியவந்தது.

மேலும் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியைச் சேர்ந்த ராமராசு (வயது 32), சந்திரசேகரன் என்றும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை கைது செய்த தனிப்படை போலீசார் கார் மற்றும் வேனையும், அதில் இருந்த  66 ஆடுகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் சிறுகனூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பொதுமக்கள் குற்றச்சாட்டு :

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆடுகளை திருடி சென்ற நபர்களை பிடித்து போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்ததாகவும், போலீசார் அவர்களை வழக்குப்பதிவு செய்யாமல் விடுவித்து விட்டதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு புகார் சென்றது. அதன் அடிப்படையில் தான் தனிப்படை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு ஆடு திருடர்களை பிடித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News