திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 138 பவுன் நகை, பணம் திருட்டு

திருச்சி சிறுகனூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 138 பவுன் நகை மற்றும் பணம் திருடப்பட்டது.

Update: 2021-11-08 07:27 GMT

கொள்ளை நடந்த வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்தன.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பெரகம்பி என்ற கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவருடைய மனைவி லதா. இவர்களுக்கு நிரோஷா என்ற மகளும், சங்கீத்குமார் என்ற மகனும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி சென்னையில் வசிக்கிறார். மகன் சங்கீத் குமாருக்கு கடந்த 6 மாதத்திற்கு முன் திருமணம் நடைபெற்றது.

இதில் அன்பழகன் சார்ஜாவிலும், மகன் துபாயிலும் வேலை செய்து வருகின்றனர். சங்கீத்குமாரின்மனைவி தன் தாய் வீடான துறையூரில் உள்ளார். அன்பழகனின் மனைவி லதா மட்டும் பெரகம்பியில் தனியாக வசித்து வருகிறார். சென்னையில் வசிக்கும் தனது மகள் வீட்டிற்கு தீபாவளி பண்டிகைகொண்டாடுவதற்கு கடந்த 2-ந்தேதி லதா சென்றுள்ளார். இந்நிலையில்வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததை அக்கம் பக்கத்தினர் பார்த்துள்ளனர்.  நீண்ட நேரமாக கதவு திறக்கப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த அவர்கள் வீட்டை பார்த்த போது பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இது குறித்து லதாவிற்கு தகவல் தெரிவித்தனர்.

லதா வந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த திருட்டு கும்பல் பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 138பவுன்  தங்க நகைகள், 8கிலோ வெள்ளி பொருட்கள், ரூ. 1.5லட்சம் மதிப்பிலான வைரதோடு,ரொக்கப்பணம் ரூ.30 ஆயிரம் கியவற்றை திருடிக்கொண்டுசென்றிருப்பது தெரிய வந்தது.இந்த சம்பவம் குறித்து சிறுகனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் பிரிவினர் வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி சரக டி. ஐ .ஜி.  சரவணசுந்தர் மற்றும் எஸ்.பி.மூர்த்தி ஆகியோரும் நேரடியாக வந்து விசாரணை மேற்கொண்டனர்.இந்த கொள்ளையில் துப்புதுலக்க   4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News