அண்ணா பிறந்த நாள்- திருச்சி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தொண்டர்களுக்கு அழைப்பு
அண்ணா பிறந்தநாளையொட்டி திருச்சிபுறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தொண்டர்களுக்கு அழைத்து விடுத்து உள்ளார்.;
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி. வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது-
கழக இணை ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், எதிர்கட்சி துணைத் தலைவர் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி,
பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள் விழா (15.9.2021) புதன்கிழமை திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அண்ணா சிலை உள்ள இடங்களில் சிலைக்கு மாலை அணிவித்தும், மற்ற இடங்களில் அண்ணா அவர்களின் புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்துமாறு கழக நிர்வாகிகளை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.