திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல்
திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. உட்கட்சி தேர்தலில் தொண்டர்கள் ஆர்வமுடன் மனு கொடுத்தனர்.
அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதலமைச்சர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளர், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரின் அறிவுறுத்தலின் படி திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் அ.தி.மு.க உட்கட்சி தேர்தல் ௨ நாட்கள் நடைபெற்றது.
மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி உட்கட்சி தேர்தல் தொடர்பான பணிகளுக்கு தலைமை தாங்கினார்.
துறையூர் தெற்கு ஒன்றிய கழகத்தில் நடைபெற்ற உட்கட்சித் தேர்தலில் நரிக்குறவர் இன மக்கள் தங்கள் பகுதிக்கு புதிய கிளை உருவாக்கித் தருமாறு வேண்டுகோள் விடுத்தனர். தேர்தல் நடைபெற்ற அனைத்து இடங்களிலும் தொண்டர்கள், நிர்வாகிகள் ஆர்வமுடன் விண்ணப்ப படிவங்களை வாங்கி பூர்த்தி செய்து கொடுத்தனர்.
இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி.கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர், முன்னாள் அமைச்சர் என் ஆர்.சிவபதி ஆகியோர் தேவையான ஏற்பாடுகளை செய்தனர்.