திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் நாளை அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல்
திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் நாளை அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல் 30 இடங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.;
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு. பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல்கள் நாளையும் (22ம் தேதி), நாளை மறுநாளும்( 23-ம் தேதி) நடைபெற உள்ளது. பேரூராட்சிகளைப் பொறுத்தவரை சிறுகமணி, ச.கண்ணனூர், மண்ணச்சநல்லூர், தொட்டியம், காட்டுப்புத்தூர், தா.பேட்டை, மேட்டுப்பாளையம், பாலகிருஷ்ணம்பட்டி, உப்பிலியபுரம் ஆகியவற்றிற்கும், ஊராட்சி ஒன்றியங்கள் பொறுத்தவரை அந்தநல்லூர் வடக்கு, அந்தநல்லூர் தெற்கு, மணிகண்டம் வடக்கு, மணிகண்டம் தெற்கு, மணப்பாறை வடக்கு, மண்ணச்சநல்லூர் கிழக்கு, மண்ணச்சநல்லூர், முசிறி கிழக்கு ,முசிறி மேற்கு, தொட்டியம் கிழக்கு, தொட்டியம் மேற்கு, தா.பேட்டை கிழக்கு, தா.பேட்டை மேற்கு, துறையூர் வடக்கு, துறையூர் தெற்கு, உப்பிலியபுரம் வடக்கு, உப்பிலியபுரம் தெற்கு ஆகியவற்றிற்கும், நகரங்களைப் பொறுத்தவரை துறையூர் நகரம் ,முசிறி நகரம், பகுதி கழகங்களை பொறுத்தவரை ஸ்ரீரங்கம் பகுதி, திருவானைக்காவல் பகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற இருப்பதால் அந்தந்த ஒன்றியம், பேரூர் மற்றும் பகுதி கழகங்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள திருமண மண்டபம் மற்றும் இடங்களில் அ.தி.மு.க தொண்டர்கள் பங்கேற்று தேர்தல் தொடர்பான மனுக்களை அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. மொத்தம் 30 இடங்களில் நடைபெறவுள்ள இந்த தேர்தல் தேர்தலில் கட்சியின் மேல் மட்டஆணையராக முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி கலந்து கொள்கிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.