சாலையோரம் நின்ற லாரியில் ரூ 2.25 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் திருட்டு
திருச்சி அருகே சாலையோரம் நின்ற லாரியில் இருந்து ரூ.2.25 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருடிய, திருடனை போலீசார் தேடி வருகின்றனர்.;
சென்னை மதுராந்தகம் பகுதியில் உள்ள என்.ஜே.எஸ்.என்.ஜே.என்ற மதுபான தொழிற்சாலையில் இருந்து 975 மதுபான பெட்டிகளை ஒரு லாரியில் ஏற்றிக்கொண்டு சிவகங்கைக்கு சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக ஒரு லாரியை லாரி டிரைவர் ஓட்டி வந்தார்.
அப்போது திருச்சி சமயபுரம் பகுதியில் உள்ள டோல்பிளாசா அருகே லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு டிரைவர் டீ குடிக்க சென்றுள்ளார். பின்னர் டீ குடித்துவிட்டு வந்து அந்த லாரியை பார்த்த போது லாரியில் வைத்திருந்த ரூ. 2.25 லட்சம் மதிப்புள்ள 36 மதுபான பெட்டிகள் திருடு போனது தெரியவந்தது.
இது குறித்து லாரி டிரைவர் செல்வம் என்பவர் சமயபுரம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மதுபான பாட்டில்கள் திருட்டு குறித்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.