திருச்சி அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில் மூதாட்டி பலி- 4 பேர் காயம்
கார் மரத்தில் மோதிய விபத்தில் மூதாட்டி பலி. 4 பேர் காயமடைந்தனர்.;
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பட்டூரைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி மனைவி சத்தியவாணி (வயது60). நேற்று இவரும், இவரது உறவினர்கள் செல்வராஜ் (வயது 60),ஜோதி (வயது 60), இந்திராணி (வயது 50), சீனிவாசன்(வயது 48) ஆகியோர் துறையூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.
திருவெள்ளரை அருகே சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி சாலை ஓரத்தில் இருந்த ஒரு புளியமரத்தில் மோதியது. இதில் காரில் பயணம் செய்த சத்தியவாணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 4 பேரும் பலத்த காயமடைந்தனர். இது குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.